arun pandian

Advertisment

தமிழ் சினிமாவில் 90-களின் காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். பல ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல்,நடிப்பிற்கு முழுக்குப் போட்டிருந்த இவர், 'அன்பிற்கினியாள்' படத்தின் மூலம் மீண்டும் நடிப்பு பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம், நாளை (05.03.2021) வெளியாகவுள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="b926e080-e9a1-4121-8713-e9b37f8dbbad" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside_18.png" />

இந்த நிலையில், அதர்வா நாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் அருண் பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகவுள்ளது. அப்படத்தை, ‘டார்லிங்’, ‘கூர்கா’, ‘100’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தில் அருண் பாண்டியன் அதர்வாவிற்குத் தந்தையாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இப்படம், தமிழ் சினிமாவில் அருண் பாண்டியனுக்கு வலுவானரீ-என்ட்ரி கொடுக்கும் விதமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.